போலியான மனிதர்கள், போலியான உறவுகள்
இந்த மானிடப்பிறப்பு வேதனை நிறைந்ததுதான்
இருந்தும் நீ சாதனை படைக்கிறாய்
இச்சமுதாயத்துக்கு உன் வேதனை எங்கே புரியும்
குறுகிய சிந்தனைகளுடன் வாழும் இவர்களுக்கிடையில்
நீ வாழ்ந்துதான் ஆக வேண்டும்
மனம்விட்டுச் சிரித்துவிடு கவலையை மறக்க
பிறருக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி
ஒருபோதும் தன்னை எண்ணி உருகியதில்லையே
நீ சென்ற வாழ்க்கைப் பாதையில்
ஈராமான உன் காலடிகளைக் கண்டு
நான் பேச வார்த்தையின்றி மெளனமானேன்
இந்த மனிதவாழ்க்கையென்னும் நதி
எங்கே போய்ச் சேர்கிறது
சொர்க்கத்திலும் சேரலாம் சோகத்திலும் சேரலாம்
இப்புவியில் வாழ நீயும் கற்றுக்கொள்
சுயனலவாதிகளே அதிகமாக வாழ்கிறார்கள் இங்கு
மண் தின்னும் உடலை சுமந்து கொண்டு
ஏதோ சொல்லவந்தேன் வார்த்தைகள்
மட்டுமெனோ வெளிவரவில்லை
மனம் மட்டும் ஏனோ அழுகிறது உனக்காக
கவலைகள் என்று நீ நினைப்பதெல்லாம்
கரைந்து போகும் ஒரு நாள்
உன் கண் முன்னே காத்திரு நண்பனே....
- நன்றி சிந்துகவி