Thursday, September 23, 2010
மனதுக்கு ஒரு மருந்து...
இழந்ததின் மீது மனிதனுக்கு எப்போதுமே ஒரு ஏக்கம் இருக்கிறது. அதைத் தொலைத்தாலன்றி அவனுக்கு புதியதாய் வேறொன்று கிடைக்கப்போவதில்லை...
Tuesday, September 14, 2010
படித்ததில் பிடித்தது...
வாழ்க்கை
என்பது தொடர்ந்து வாழ்வது,
உயிருடன் இருந்து இயங்குவது...
மகிழ்ச்சி
என்பது விரும்பத்தகுந்த
அல்லது நிறைவு தரக்கூடிய
அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்,உவகை, சந்தோஷம்...
குழப்பங்கள்
என்பது எதையும் செய்ய இயலாத வகையில்
மனதின் தெளிவற்ற நிலை...

Monday, September 13, 2010
கவிதை...கவிதை...ஆஹா..கவிதை...
சுட்டெரிக்கும்
சூரியனையும்
சுடலாம்...
நம்பிக்கை
எனும்
சுடர் இருந்தால்....
தன்னம்பிக்கை...
அது தன்னை
உயர்த்தும் கை...
சூரியனையும்
சுடலாம்...
நம்பிக்கை
எனும்
சுடர் இருந்தால்....
தன்னம்பிக்கை...
அது தன்னை
உயர்த்தும் கை...
வாழ்க்கை
பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!
நான் அழுத அந்தத் தருணங்கள்....
நீங்களே தோற்றும் போகும் தருணம்: நீங்கள் வெற்றி நிச்சயம் என நம்பியிருந்த தருணம், தோற்றுப் போனதாய் பெறுபேறு கிடைத்தால் என்ன செய்வீர்கள். உங்களை அறியாமலேயே கண்கள் நனையத் தொடங்கும்.
நல்லவர்
மனதின் அடியாழத்தில் எல்லோரும் நல்லவராகவே இருக்க விரும்புகிறார்கள்.நல்லவராக இருப்பதற்கு இரண்டு வழிகளுள்ளன.ஒன்று நல்லவராக இருப்பது.அது மிகவும் கடினம்.மற்றொரு வழி அடுத்தவர் தவறு என்று நிரூபித்து விடுவது.நீங்கள் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.மற்றவனைத் திருடன்,கொலைகாரன்,கெட்டவன் என்று நிரூபித்து விடும் போது நான் நல்லவன் என்ற உணர்வு சட்டென்று வந்து விடுகிறது.இது மிகவும் எளிமையானது.பெரிது படுத்தப்பட்ட பிறர் தீமைக்கு முன்னால் நீங்கள் அப்பாவி போல் காணப் படுகிறீர்கள்.அதனால் தான்,யாராவது ஒருவர் இன்னொருவரைப் பற்றி,''அந்த ஆள் கெட்டவன்,''என்று சொல்லும் போது,நீங்கள் ஒன்றுமே சொல்லுவதில்லை.அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள்.அதோடு,'நானும் கூட அப்படித்தான் நினைத்தேன் ,'என்று சொல்லிவிடுகிறீர்கள்.
ஆனால்,யாராவது இன்னொருவரைப் பற்றி நல்லதாக ஏதாவது சொல்லி விட்டால்,நீங்கள் எதிர் வாதம் செய்கிறீர்கள்.அவர் கூற்றுக்கு ஆதாரம் கேட்கிறீர்கள்.கடவுளை நம்புவதற்கு ஆதாரம்கேட்பவர்கள் கூட சாத்தானை நம்புவதற்கு ஆதாரங்கள் கேட்பதில்லை.

மனதின் தந்திரம்
அறிவுக் கனியை உண்ணக் கூடாது என்பது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடப்பட்ட உத்தரவு.ஆனால் அதை சுவைக்க அவர்களுக்கு ஆசை.அது இயல்பு தானே.எது கூடாது என்று தடுக்கப் பட்டாலும் அதன் மீது ஆசை எழுவது இயல்பு.மனம் அப்படித்தான் செயல் படும்.மனதிடம் இன்னொரு தந்திரமும் உண்டு.அது உங்களைத் தூண்டிவிடும்.பொறுப்பை யார் தலையிலாவது சுமத்தத் தான் அது தந்திரம் செய்யும்.
எப்போது எது தடுக்கப் பட்டாலும் அதன் மீது மனதிற்கு ஆர்வம் வந்து விடும்.அது ஒரு அழைப்பு போல.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயல்பாகவே கனியை சுவைக்க ஆசை ஏற்பட்டு விட்டது.அங்கே வேறு யாரும் இல்லை.ஆனால் கதை என்ன சொல்கிறது?சாத்தான் தூண்டி விட்டான் என்கிறது.இது தான் யார் மீதாவது பொறுப்பைத் தள்ளி விடும் மனதின் தந்திரம்.
சாத்தான் ஒரு பலிகடா தான்.அந்த சாத்தான் மனதின் கண்டுபிடிப்பு.சாத்தான் தூண்டினான்;மயக்கி ஏமாற்றி விட்டான் என்று சொல்லி விட்டால்,நீங்கள் பாவியல்ல என்று தப்பி விடலாமல்லவா?ஆனால் கவர்ச்சி ஏற்பட்டதென்னவோ,தடுக்கப் பட்டதனால்தான்.மனம் செய்த தந்திரம் கதையை மாற்றி விட்டது.ஆனால் கதை அழகானது.
மனமே சாத்தான்.தந்திரத்திற்கான பழைய குறியீடு தான் பாம்பு.மனமே பாம்பு.

Subscribe to:
Posts (Atom)